
தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரம் – NSS Unit 217
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரம் சார்பாக மினி மராத்தான் ஒன்று நடத்தப்பட்டது இதில் காமராஜ் கல்லூரியின் உடற்கல்வித்துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் அணி எண் 217 சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் பிரிவில் முதல் மூன்று பரிசுகள், பெண்கள் பிரிவில் முதல் மூன்று பரிசுகள் காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகளே வென்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட DSP அவர்கள் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியை காமராஜ் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். கு.ஆனந்தராஜ் அவர்கள் வழி நடத்தினார்.