நமது கல்லூரியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கு,

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஜனவரி  என வருடத்திற்கு இரு முறை காமராஜ் கல்லூரியில் முனைவர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்.

முனைவர் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டத்தை, பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றிருக்க  வேண்டும்.

பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட தகுதியை பெற்ற மாணவர்கள், வருடம் இரு முறை ஜனவரி  மற்றும் ஜூலை மாதத்தில் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Eligibility Test) தேர்ச்சி பெற்று பல்கலைக் கழகத்திலிருந்து கமென்ஸ்மென்ட் ஆர்டர் (Commencement Order) பெற்றிருக்க வேண்டும். NET மற்றும் SET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இத்தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இவர்களும் பல்கலைக் கழகத்திலிருந்து கமென்ஸ்மென்ட் ஆர்டர் பெற வேண்டும்.

பல்கலைக் கழகத்திலிருந்து கமென்ஸ்மென்ட் ஆர்டர் பெற்ற மாணவர்கள்,  கல்லூரிக்கு வருகை புரிந்து, கல்லூரி முதல்வரின் பரிந்துரையின் படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிகாட்டியின் அறிவுரைப்படி, பதிவு வழிமுறையினை (Registration Process) பூர்த்தி செய்ய வேண்டும்.   

பல்கலைக் கழகத்திலிருந்து கமென்ஸ்மென்ட் ஆர்டர் பெற்ற 10 நாட்களுக்குள் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், சான்றிதழ்கள் மற்றும் கல்லூரிக் கட்டணத்துடன் முதல்வரிடம் சமர்ப்பித்து சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

ஆராய்ச்சி மையங்களின் பட்டியல் மற்றும் ஆராய்ச்சி வழிகாட்டிகளின் (Guide) பெயர்கள் கீழ்கண்ட இணைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளன https://research.kamarajcollege.ac.in/.

Interested candidates are requested to contact the Research Guides for availability of guideship.

Click here for more information