நமது கல்லூரியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கு,

ஒவ்வொரு ஆண்டும் +2 தேர்வு முடிவுகள் வெளியானவுடன், காமராஜ் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்.

மாணவர்கள் கல்லூரி இணையதளத்தில் தங்களை முன் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். முன் பதிவு படிவம் கல்லூரி இணையதளத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் (+2 முடிவுகள் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு) கிடைக்கும்.

+2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை புரிந்து தங்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மட்டுமே சேர்க்கைக்காக கருதப்படும்.

அடுத்தபடியாக மாணவர்கள் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இதனைத் தொடர்ந்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.

அரசு உதவி பெரும் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு +2 தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களில் நடைபெறும். சுயநிதி கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை +2 தேர்வு முடிவுகள் வெளியான உடனே நடைபெறும்.

தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட பிறகு, சேர்க்கையை உறுதி செய்ய மாணவர்கள்  விதிமுறைகளின்படி கட்டணம் செலுத்த வேண்டும்.