தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 வார விழா
காமராஜ் கல்லூரியின் ஆண்கள் விடுதி காப்பாளர் முனைவர். S.ராமன் மற்றும் பெண்கள் விடுதி காப்பாளர் முனைவர் மதுமிதா அவர்களின் தலைமையில் நமது கல்லூரி வளாகத்தில் வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 வார விழாவை முன்னிட்டு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி தாசில்தார் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை காமராஜ் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். அ.அருணாச்சல ராஜன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட விடுதி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை காமராஜ் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் முனைவர். கு.ஆனந்தராஜ் அவர்கள் வழி நடத்தினார்.
