கல்வி ஊக்கத்தொகை

Scholarships for A.Y 2023 – 2024

The meritorious and needy students can avail the following scholarships to pursue Undergraduate Degree Program in Kamaraj College during admission 2023 – 2024.

2023 – 2024ம் ஆண்டு இளங்கலை பட்ட படிப்பில் சேரும் தகுதியான மாணவ மாணவியர்களுக்கு கீழ்க்கண்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  1. The students who have secured more than 92% marks in core subjects can avail 50% scholarship to join in SF Courses.
    சுயநிதி பாடப்பிரிவில் சேரும் மாணவ மாணவியர்கள் முதன்மை பாடங்களில் 92% மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் 50% உதவித்தொகை பெறலாம்.

    The students who have secured more than 96% marks in core subjects can avail 50% scholarship to join in Aided Courses.
    அரசு உதவிப்பெறும் பாடப் பிரிவில் சேரும் மாணவ மாணவியர்கள் முதன்மை பாடங்களில் 96% மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் 50% உதவித்தொகை பெறலாம்.

  1. The students who have achieved in sports events at district level and above can avail 50% scholarship both in the Admission Fees and also in the annual Hostel Establishment Fees.
    விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் மற்றும் அதற்கு மேல் சாதனை புரிந்தவர்கள் 50% கல்வி கட்டணத்திலும் 50% வருடாந்திர விடுதி கட்டணத்திலும் உதவித்தொகை பெறலாம்.

  2. The students who have achieved in cultural events at district level and above can avail 50% scholarship.
    கலை, இலக்கிய போட்டிகளில் மாவட்ட அளவில் மற்றும் அதற்கு மேல் சாதனை புரிந்தவர்கள் 50% கல்வி கட்டணத்தில் உதவித்தொகை பெறலாம்.

  3. Students who have studied in Government schools can avail 60% scholarship for SF Courses. Students who have studied in Government aided schools may avail 35 % scholarship for SF Courses.
    அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்கள்; சுயநிதி பிரிவின் கல்வி கட்டணத்தில் 60% உதவித்தொகை பெறலாம். அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்கள்; சுயநிதி பிரிவின் கல்வி கட்டணத்தில் 35% உதவித்தொகை பெறலாம்.

  4. Students who have studied in Government Schools can avail 80% scholarship for Aided Courses. Students who have studied in Government Aided Schools may avail 45% scholarship for Aided Courses.
    அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்கள்; அரசு உதவி பெறும் பிரிவின் கல்வி கட்டணத்தில் 80% உதவித்தொகை பெறலாம். அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்கள்; அரசு உதவி பெறும் பிரிவின் கல்வி கட்டணத்தில 45% உதவித்தொகை பெறலாம்.

  5. The distressed needy students due to loss of any one parent can avail 50% scholarship.
    தாய் அல்லது தந்தையை இழந்த மாணவ, மாணவியர்கள் 50% உதவித்தொகை பெறலாம்.