
World Trauma Day 2023 – UBA & Computer Science Dept.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு துறை மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் (AISHE code – 41209) கணிப் பொறியியல் துறை இணைந்து உலக விபத்து தினத்தை முன்னிட்டு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. (17-10-2023) தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்த பயிற்சி முகாமினை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர். Dr. G. சிவகுமார் காமராஜ் கல்லூரி முதல்வர் (பொ) Dr. V. ஜோசப் ராஜ் மருத்துவர் P. குமரன் பேராசிரியை Dr. A. சுபாஷினி ஆகியோர் திருக்குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். விபத்து குறித்த விழிப்புணர்வு பரதநாட்டிய கலை நிகழ்ச்சியுடன் பயிற்சி முகாம் துவங்கியது. இதில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவ- மாணவியர் குழு மற்றும் செவிலியர்கள் மாணவ மாணவிகளுக்கு முதலுதவி மற்றும் அடிப்படை விபத்து உயிர் காக்கும் வழிகாட்டு முறைகளை விளக்கி காட்டினார்கள் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ.நாகராஜன் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவு துணைத் தலைவர் மருத்துவர் மணிமேகலை ஆகியோர் செய்து இருந்தனர். கணிப்பொறியியல் துறை மாணவ தலைவர் செல்வன் M.பால வசந்த் நன்றியுரை வழங்கினார்.