Back
Home Events Vigilance Awareness Week – NSS Units – 54, 55, 56, 145, 146 & 181

Vigilance Awareness Week – NSS Units – 54, 55, 56, 145, 146 & 181


இந்தியாவில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் (Vigilance Awareness Week) ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை (அக்டோபர் 31) ஒட்டி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் (Central Vigilance Commission) அனுசரிக்கப்படுகிறது. அதனை நினைவுகூறும் விதமாக இன்று 23-10-2026 (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் அணிஎண்கள் 54,55,56,145,146,மற்றும் 181 சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் உதவி சுங்க அலுவலர் சந்திரகாந்த் நிகழ்வில் தலைமை தாங்கி மத்திய அரசுப் பணிக்கு தேவையான பயிற்சிகளும், பணிகளும் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தார்கள். கல்லூரி துணை முதல்வர் முனைவர் செந்தில் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அய்யனுராஜ் ( அணிஎண்-56) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். பொது வாழ்வில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துதல் போன்ற கருத்துகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் 150 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Date
Oct 23 2026
Expired!
Time
10:00 am - 12:00 pm
Location
Seminar Hall - AMMS. Ganesan Nadar Block

Leave A Reply