Taekwondo Poomsae Seminar, Referee Seminar and Colour belt Exam – Physical Education Dept.
தூத்துக்குடி மாவட்டம் சாம்பியன்ஸ் டேக்வாண்டோ அகாடமி மற்றும் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை, காமராஜ் கல்லூரி இனைத்து நடத்தும் இரண்டு நாட்கள் (21/10/23 & 22/10/23) TAEKWONDO POOMSAE SEMINAR, REFEREE SEMINAR AND COLOUR BELT EXAM நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் S.R.SELVAM CHRISTOPHER (Champions Taekwondo Academy) அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காமராஜ் கல்லூரியின் செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா P. S. P. K. J. SOMU அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட டேக்வாண்டோ விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். M.JOHN DE BRITTO (International Refree and International Taekwondo Master) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். இந்த நிகழ்ச்சியை காமராஜ் கல்லூரியின் விளையாட்டுத்துறை தலைவர் முனைவர். கு.ஆனந்தராஜ் அவர்கள் வழி நடத்தினார்.
