
Seminar on Conquer Yourself – YRC & Tamil Dept.
18.10.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்துறையும், பிற துறைகளும் சேர்ந்து இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி ஜா.ரியானி வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் சிறப்பு விருந்தினரை கெளரவப்படுத்தினார்கள். வேதியல் துறை பேராசிரியர் முனைவர். சக்திவேல் அவர்கள் சிறப்பு விருந்திரை கௌரவப்படுத்தினார்கள் ‘. சிறப்பு விருந்தினர் ‘conquer yourself” என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள். உன் வாழ்க்கையை நினைத்து பார்க்கும் முறையை குறித்து, மாணவர்களிடம் வினாக்கள் கேட்க மாணவர்கள் பதில் அளித்தார்கள். இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவர்கள் சோ.சேலை ராஜா மா.சீதாராமன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார்கள். இரண்டு மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இளங்கலை முதலாம் ஆண்டு மாணவன் மா.சீதாராமன் நன்றியுரை வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண்ணோடு விழா இனிதே முடிந்தது.