
Seminar on Addiction Programme – YRC & Tamil Dept.
12.08.2023 (சனிக்கிழமை) அன்று தமிழ்த் துறை இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும், காமராஜர் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து அலைபேசி உபயோகத்தில் சிக்குண்டுத் தவிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தியது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு தொடங்கப்பட்டு, மாணவி மா.முத்து அருணா வரவேற்புரை வழங்கினார். பின்னர் நமது சிறப்பு விருந்தினரைத் துணைமுதல்வர் அவர்கள் கெளரவித்து வாழ்த்துரை வழங்கினார். அதன் பின் சிறப்பு விருந்தினர் விழிப்புணர்வு உரை நிகழ்த்தியதோடு . மாணவியருக்கு உரை குறித்து வினாக்களைக் கேட்டு சிறப்பாக பதிலளித்த மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.நிகழ்வின் இறுதியாக மாணவி கு.அஸ்வதி ராதா அவர்கள் நன்றியுரை வழங்க நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவடைந்தது.இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக Dr.J.S.Darvin அவர்களும், முன்னிலையாக Dr.A. Arunachala Rajan (vice principal) ஐயா அவர்களும் தமிழ்த் துறை பேராசிரியர்களும் பிற துறை பேராசிரியர்களும் நம் துறை மாணவ, மாணவியர்களும் நிகழ்ச்சியில் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்.தமிழ்த்துறை தலைவர் முனைவர் .க.திலகவதி அனுமதியுடன் பேராசிரியர் ம. மாதரசி அவர்கள் இந்நிகழ்வினை சிறப்பாக நடத்தித்தினார். இந் நிகழ்ச்சி மாணவகளுக்குப் பயனுள்ள வகையில் இருந்தது.