Home Events Science & Technology Knowledge Transfer Program – UBA

Science & Technology Knowledge Transfer Program – UBA

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் மற்றும் நாகர்கோவில் அஞ்சு கிராமம் ரோஹிணி அறிவியல் தொழில் நுட்ப பொறியியல் கல்லூரி உன்னத் பாரத் அபியான் இடையே மாணவ மாணவிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி, தொழில் நுட்ப அறிவு பகிர்வு பரிமாற்றம் குறித்த அமர்வு நடை பெற்றது. பி. டெக். இளநிலை விவசாய பொறியியல் மாணவ மாணவிகள் நிகழ்வில் பங்கேற்றனர். பாரத பிரதமரின் கிசான் சமரிதி யோஜனா விழிப்புணர்வு மற்றும் தாவரவியல், விலங்கியல், மீன்வளம் துறைகளில் வரும் கல்வி ஆண்டில் இரு கல்லூரிகளும் இணைத்து மாணவ மாணவிகள் திறன் சார் பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திட பூர்வாங்க செயல் திட்டம் தயாரிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம், முதல்வர்கள் மற்றும் தொழி்நுட்ப வல்லுநர் குழு ஆலோசனை பேரில் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதன் மூலம் மத்திய அரசு பணிகளில் நமது கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெரும் வண்ணம் நிகழ்வுகள் தயாரிக்க பட்டு வருகிறது.

Date

Feb 09 2024
Expired!

Time

11:00 am

Leave A Reply