
School Students Education Programme – UBA
பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்குதல் மற்றும் எழுத்தறிவு தின விழா -2023. தூத்துக்குடி சிவத்தையாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து உயர்நிலை பள்ளி நூலகத்திற்கு உன்னத் பாரத் அபியான்(AISHE code – 41209) சார்பாக புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு (09-09-2023) அன்று நடைபெற்றது. காமராஜ் கல்லூரியின் பொருளாதார துறை (S.F) முன்னாள் துறை தலைவர் முனைவர். ஜெ.விஜயலட்சுமி அவர்கள் மற்றும் பொருளாதார துறை முன்னாள் மாணவர். திரு. K. மணி கணேஷ் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், மாவட்ட செயலாளர் ஆகியோர் சுமார் ரூ 500 -/- மதிப்புள்ள 30க்கும் மேற்பட்ட பொருளாதாரம், வணிகவியல், புள்ளியல், கணக்கு பதிவியல், தாவரவியல், விலங்கியல், பொது அறிவு உள்ளிட்ட புத்தகங்களை வழங்கி இருந்தார்கள். பள்ளி தலைமை ஆசிரியை திருமதி நை.பவானி காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் அமைப்பிற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்கள் புத்தக வழங்கும் நிகழ்விற்கான ஏற்பாடுகளை UBA மாணவப் பிரதிநிதிகள் செய்து இருந்தனர்.