
School students Education Program – UBA
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் (AISHE code – 41209) மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி, தெற்கு புது தெரு இணைந்து பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது ISRO- இந்திய விண்வெளித் துறை (செப்டம்பர்-2-2023) சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு விண்ணில் ஏவப்படும் PSLV-C57 ஆதித்யா- L-1 நிகழ்வினை நேரடி காணொளி வாயிலாக சுமார் 100 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.ஆ.தங்கமணி அவர்கள் கூறுகையில், ஆதித்யா விண்கலம் சிறப்பாக வெற்றி அடைந்ததை மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் காணொளியில் கண்டனர். விண்வெளி, வானியல் நிகழ்வுகளை புரிந்து கொள்ள இது உதவுகிறது.விண்வெளி ஆராய்ச்சிகளை மாணவர்கள் மத்தியில் எழுச்சியுள செய்வதாக கூறினர்.மேலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர், ஜெ.நாகராஜன் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், ராக்கெட் மற்றும் சூரிய குடும்பம் பற்றி சிறப்பு உரையாற்றினார்.