
NSS Special Camp : Units 54 & 56
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண்கள்: 54 & 56 சார்பில் மார்ச் 22-03-2024 முதல் ஏழுநாட்கள் நடைபெற்ற சிறப்புமுகாம் 28-03-2024 -இல் இனிதே முடிவடைந்தது. முகாம் அணி எண்: 54 தெற்கு காலாங்கரை பகுதியிலும், அணி எண் : 56 சிறப்பு முகாம் வடக்கு காலாங்கரை பகுதியிலும் நடை பெற்று வந்தது. மனோன் மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் A.வெளியப்பன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சேர்மன் & கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. பூங்கொடி அவர்கள் ஆலோசனை பேரில் சிறப்பு முகாம் நடை பெற்றது. இம்முகாமில் வரலாறு மற்றும் வணிகவியல் துறை மாணவர்கள் பங்குகொண்டனர்.முகாமிற்கு செல்லும் மாணவர்களை வாழ்த்தி, முகாமின் நோக்கம் மற்றும் நன்னடத்தை பற்றி துணைமுதல்வர் முனைவர்.A.அசோக் அவர்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார்கள்.
முகாமின் முதல்நாள் 22-03-2024-வெள்ளிக்கிழமை தொடக்கவிழா விழா நடைபெற்றது.இதில் ஊர்பொதுமக்களும்,நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களும் பங்குகொண்டனர்.ஊர்த்தலைவர் திரு.பொன்னுலிங்கம் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ச.மாரிமுத்து சிறப்புரை வழங்கினார்கள்.56 -இன் திட்ட அலுவலர் மா.அய்யனுராஜ் நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள்.ஊர் பொருளாளர் திரு.பெருமாள் அவர்கள் வரவேற்று பேசினார்கள்.விழா நிறைவாக திட்ட அலுவலர் திரு.பா.ஆனந்த் நன்றி கூற முதல்நாள் விழா இனிதே நிறைவடைந்தது.
இரண்டாம்நாள் நிகழ்வாக 23-03-2024 -சனிக்கிழமை பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.இதனை தூத்துக்குடி அக்ஷிதா பல் மருத்துவமனை மருத்துவர்கள் Dr.அஸ்வேஷ்யா மற்றும் Dr.வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் நடத்தினர். மருத்துவர்களை திட்ட அலுவலர் திரு.ஆனந்த் வரவேற்று பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்கள்.
மூன்றாம் நாள் நிகழ்வு 24-03-2024-ஞாயிற்றுக்கிழமை நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டது.
நான்காம்நாள் நிகழ்வான 25-03-2024- திங்கட்கிழமை மரம்நடுவிழா நடைபெற்றது.இதில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு.மணிமேகலை தலைமையேற்று மரங்களின் பயன்பாடுகுறித்து கருத்துரைக்க,திட்ட அலுவலர் பா.ஆனந்த் மரக்கன்று வழங்க தலைமையாசிரியை அவர்களால் பள்ளிவளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஐந்தாம் நாள் நிகழ்வாக 26-03-2024 -செவ்வாய்கிழமை போதைப்பொருள் மற்றும் பகடிவதை விழிப்புணர்வு பேரணி காவல் ஆய்வாளர் V.எழில் சிங் ஆலோசனையின் பெயரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி துணை தலைமையாசிரியர் திருமதி.ஜனட் கஸ்தூரி தலைமையேற்க நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களால் வடக்கு காலாங்கரை முதல் தெற்கு காலாங்கரை வரை நடைபெற்றது.இதில் மாணவர்கள் பேரணியாக நடந்துசென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஆறாம் நாள் நிகழ்வாக 27-03-2024-புதன்கிழமை தெற்கு மற்றும் வடக்கு காலாங்கரையில் வேலைவாய்ப்பற்ற இளையோர் குறித்த கள ஆய்வு நடைபெற்றது.இவ்வாய்வின் அடிப்படையில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இக்கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றியும் கல்வி இல்லாமலும் இருப்பதை ஆய்வு செய்தனர். நம் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக இவ்வூரில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இப்பணியை நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களும்,திட்ட அலுவலர்களான திரு.பா.ஆனந்த் மற்றும் திரு.மா.அய்யனுராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஏழாம் நாள் நிகழ்வாக 28-03-2024-வியாழக்கிழமை ஊர்மக்களுடன் அனுபவப் பகிர்வு மற்றும் நிறைவு விழாவும்,பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
காமராஜ் கல்லூரியின் உதவிப்பேராசிரியர்கள் ஏழு நாட்களும் வருகைதந்து மாணவர்களுக்கு ஆலோசனைகளையும், இனிப்புகளையும் வழங்கிச் சென்றனர். இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்திதே பரிசளிப்பு விழாவும்,நாட்டுநலப்பணித்திட்டம் 54&56 அணிகளுக்கு ஊர்ப்பொதுமக்களால் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஊர்த்தலைவர் திரு.பொன்னுலிங்கம்,பொருளாளர். திரு.பெருமாள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்தனர். அணிஎண் 56-இன் திட்ட அலுவலர் திரு.மா.அய்யனுராஜ் வாழ்த்திப்பேச, நிறைவாக 54 – இன்திட்ட அலுவலர் திரு.பா.ஆனந்த் நன்றிகூற ,விழாவின் அனுபவங்களை வணிகவியல் துறை மாணவன் அஸ்வந்த் மற்றும் வரலாற்று துறை மாணவி ஜானகி ஆகியோர் மக்களிடம் பகிர்ந்து கொள்ள முகாம்சிறப்பாக நிறைவடைந்தது.