
NSS Special Camp – Unit: 217
காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் : 217 மற்றும் உதிரமாடன் குடியிருப்பு இணைந்து நடத்தும் ஏழு நாட்கள் சிறப்பு முகாம். முதல் நாள் தொடக்க விழாவை முன்னிட்டு இந்த சிறப்பு முகாமிற்கு தலைமை தாங்கும் உடன்குடி தொகுதியைச் சேர்ந்த சேர்மன் திரு.T.P.பாலாசிங் அவர்களும், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் திரு. மால் ராஜேஷ் அவர்களும், உடன்குடி பேரூராட்சி குழுத் தலைவர் திருமதி மீரா சிராசுதீன் அவர்களும், உதிரமாடன் குடியிருப்பு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.S.பாலசரஸ்வதி மற்றும் துணைத் தலைவர் திரு.G.ராஜகுமார் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவமனை உதவியுடன் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினோம். இதில் உதிரமாடன் குடியிருப்பு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் அப்பள்ளியை சேர்ந்த 15 ஆசிரியர்கள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர்… இந்த முகாமினை தொடங்கி வைப்பதற்காக உதிர மாடன் குடியிருப்பு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கலந்து கொண்டனர்…நான்காம் நாள் நிகழ்ச்சியாக உதிர மாடன் குடியிருப்பு ஊராட்சிக்கு பாத்தியப்பட்ட செம்புலிங்கபுரம் கிராமத்தை முழுவதுமாக சுத்தம் செய்து பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. அனிதா. R. ராதாகிருஷ்ணன் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார்.
ஐந்தாம் நாள் நிகழ்வாக உதிர மாடன் குடியிருப்பு பொதுமக்களுக்கு மாபெரும் கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் பெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 23 விளையாட்டுப் போட்டிகளும் பெண்கள் பிரிவில் 17 விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது . இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் . பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். A. வெளியப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர்களுடன் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொது குழு உறுப்பினர் திரு. சிவ சுப்பிரமணியன் அவர்களும், மெஞ்ஞானபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. F.சண்முகராஜ் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்… அதன் பின்பு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது. காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் (அணி எண் 217) முனைவர்.கு. ஆனந்தராஜ் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் கடைசி நாள் நிகழ்வாக உதிரமாடன் குடியிருப்பு கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மாபெரும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தினோம். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்கள் உடன்குடி தொகுதியை சேர்ந்த சேர்மன்.திரு. T.P பாலாசிங் அவர்களும் உதிரமாடன் குடியிருப்பு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. S. பாலசரஸ்வதி மற்றும் துணைத்தலைவர் திரு. G. ராஜகுமார் அவர்களும் உதிரமாடன் குடியிருப்பு தி.மு.க. கிளைச் செயலாளர் T. ஜெயகுமார் அவர்களும் திரு. செல்வகுமார் காவல் துறை உதவி ஆய்வாளர், காவல் பயிற்சி பள்ளி அவர்களும், கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மருத்துவராக திருமதி. T. நந்தினி அரசு கால்நடை மருத்துவர் கலந்துகொண்டு கிராமப்புறத்திலிருந்து பொதுமக்கள் கொண்டு வந்திருந்த ஆடு, மாடு, கோழி மற்றும் நாய்குட்டிகள் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தார். இந்த மாபெரும் நிகழ்ச்சியை காமராஜ் கல்லூரியின் நாட்டு நல்பணித் திட்டம் அணி எண்: 217 திட்ட அலுவலர் முனைவர். கு. ஆனந்தராஜ் ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு விருந்தினராக வந்த சேர்மன் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகளுக்கு 100-க்கு மேற்ப்பட்ட மரக்கன்றுகளை வழங்கியதுடன் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார்.