Home Events - Kamaraj College National Unity Day & Onam Celebration 2024 – UBA & NSS Units: 54, 56

National Unity Day & Onam Celebration 2024 – UBA & NSS Units: 54, 56

நமது காமராஜ் கல்லூரியில் உன்னத பாரத் அபியான் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் அணிகள் 54 & 55 சார்பில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஓணம் பண்டிகை மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உடன் சிறப்பாக (09 – 09- 2024) அன்று கொண்டாட பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலை கழகம், திருநெல்வேலி மண்டலம், நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கில துறை தலைவர் முனைவர். பா.ஜெயந்தி அவர்கள் கலந்து கொண்டு திரு குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்கள். மேலும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கபடும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு இனம் , உடை, மொழி, இசை, உணவு, கலாச்சாரம் பண்பாடு கொண்ட பாரத தேசத்தில் மாணவ மாணவிகளின் தேச பக்தி, ஒற்றுமை குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், திருவாதிரை கழி நடனம், மோஹினியாட்டம், நடை பெற்றது. அத்தப்பூ கோலமிட்டு தங்கள் திறமைகளை மாணவிகள் வெளிப்படுத்தினர். கேரள பாரம்பரிய உணவு வகைகள் வழங்க பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ .பூங்கொடி அவர்கள் ஆலோசனை பேரில் விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் A. ஆனந்த் , முனைவர் O.நேதாஜி, உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ. நாக ராஜன், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. சுபாஷினி, முனைவர். பவுன் ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave A Reply