
MIME (Boys & Girls) Inter-Departmental Competition [Day-1] – Thaamirabharani Rolling Trophy 2023
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாகத் தாமிரபரணி சுழல் கோப்பைக்காகத் துறைகளுக்கிடையிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த (2023) ஆண்டும் 20.09.2023 – 22.09.2023 ஆகிய மூன்றுநாட்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டிகளின் முதல் நாளான 20.09.2023 இன்று காலை 10 மணியளவில் மௌன நடிப்புப் போட்டியானது நடைபெற்றது. இதில் 14 துறைகளைச் சார்ந்த 91 மாணவ / மாணவியர் கலந்துகொண்டு தங்கள்திறமைகளை வெளிப்படுத்தியதுடன் சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வுக் கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்கள். போட்டியின் நிறைவில் கணிணி அறிவியல் (சுயநிதி) துறை மாணவிகள் முதல் இடத்தையும், வணிகவியல் துறை ( சுயநிதி) மாணவர்கள் மற்றும் வணிகவியல் துறை (ரெகுலர்) மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், பொருளாதாரத்துறை (ரெகுலர்) மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்கள். போட்டிகளை கல்லூரியின் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் ஆரம்பித்துவைக்க ஒருங்கிணைப்பாளர்களின் (பேராசிரியர்களின்) முழு ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்தேறியது.
On the occasion of the memorable Thamirabharani Rolling trophy conducted in Kamaraj college from 20.09.2023 -22.09.2023 the first event was mime. A total of 91 participants from 14 groups gestured their full fledged participation. Their enactment was lively and they rendered the essence of the given theme “Cyber Crime and Security”. Students from the Department of Computer Science (SF) secured the first place followed by the department of Commerce(SF) and (Aided) in the second place and the department of Economics (Aided) positioned in the third place.