
Krishna Jeyanthi Celebration – UBA
நமது காமராஜ் கல்லூரியில் உன்னத பாரத் அபியான் சார்பில் (AISHE Code: 41209) ஶ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி விழா மாணவ, மாணவிகளால் கொண்டாடப்பட்டது. கிராம பொருளாதார மேம்பாடு திட்டத்தில் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களின் தயாரிப்புக்களான சீடை, கை சுற்று முறுக்கு, அப்பம், தட்டை , இனிப்பு வகைகள் , கார வகைகள் காட்சி படுத்த பட்டது. மேலும் இந்திய நாட்டின் பாரம்பரிய கலாச்சார கிருஷ்ணா ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை உன்னத பாரத் இயக்கம் மாணவ மாணவிகள் செய்து இருந்தனர். இத்தகைய விழாக்கள் மாணவ மாணவிகளிடம் , ஒற்றுமை, ஒருங்கிணைந்து செயல் படுதல், தனி திறன் மேம்பாடு, நிகழ்வுகள் மேலாண்மை ஆகிய பண்புகளை வளர்ப்பதாக மாணவ பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.