
K2K Walk for Healthy India – UBA & NSS Units 54, 55, 56,181
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் மற்றும் போதை ஒழிப்பு அவசியத்தை வலயுறுத்தி காஷ்மீர் முதல் கனனியாகுமரி வரையில் இளைஞர்கள் 5000 கீ. மீ தொலைவு நடைபயணம் மேற் கொண்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு தேசிய சமூக ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது.பூச்சி கொல்லி இல்லாத இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக “ஆரோக்கியமான இந்தியா” எனும் தலைப்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபயணம் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பட்டதாரி இளையர் ஹரியானாவை சேர்ந்த தீபக் யாதவ், ராஜஸ்தானை சேர்ந்த ஹிரா லால் மகாவர் ஆகிய இருவரும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 5000 கீ. மீ தொலைவு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர் .கடந்த ஆண்டு நவம்பர், 2023 17 ல் இந்திய தேசிய கொடியுடன் காஷ்மிரில் இவர்கள் தொடங்கிய விழிப்புணர்வு நடைப்பயணம் இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, தில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலம் வழியாக ஜனவரி 31 ல் தமிழ் நாடு வந்தடைந்தனர். பிப்ரவரி 5 ல் தூத்துக்குடி மாவட்டம் கோவி்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ. நாகராஜன் வரவேற்றார். மேலும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி – கன்னியாகுமரி சாலை வந்தடைந்த இளைஞர்களுக்கு, கல்லூரி நிர்வாகம், நாட்டு நலப்பணி திட்ட அணி எண்கள்: 54, 55, 56 & 181 கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் , சால்வை & மாலை அணிவித்தும், வாழ்த்துகள் கூறியும் வரவேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர். ஜெ.பூங்கொடி, துணை முதல்வர்கள் முனைவர் A. அசோக், முனைவர்.A. அருணாச்சலராஜன், நாட்டு நலப்பணி திட்ட அதிகாரிகள் முனைவர்.P. ஆனந்த், முனைவர் M. அய்யனு ராஜ், முனைவர்.O. நேதாஜி, முனைவர்.A. இசக்கி முத்து, மற்றும் கல்லூரி கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு வரவேற்று வாழ்த்தினார்கள். கல்லூரியில் உள்ள சுவாமி விவேகானந்தர், மற்றும் பெருந் தலைவர் காமராஜர் சிலைகளுக்கு இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மேலும் மாணவ மாணவிகள் உடன் ஆரோக்கிய இந்தியா, இந்திய ஒருமைப்பாடு குறித்து கலந்துரையாடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உன்னத பாரத் அபியான் திட்ட ஒருங்கிணப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. சுபாஷினி ஆகியோர் செய்து இருந்தனர்.