Drug Awareness Rally – NSS Units: 54 & 56
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்-2025
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை இணைந்து போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி இன்று 26-06-2025 (வியாழன்) கல்லூரி வளாகத்திலிருந்து பக்கிள்புரம் வழியாக 3 கி.மீ வரை நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் கல்லூரியின் போதைப்பொருள் ஒருங்கிணைப்பாளர் மா.அய்யனுராஜ்(திட்ட அலுவலர் -56) வரவேற்றுப்பேசினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் பானுமதி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்.
மதுவிலக்கு அமலாக்கத்துறை துணைகண்காணிப்பாளர் வெங்கட் குருராஜ் போதைப்பொருளின் தீமைகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் Dr.மதன் அவர்கள் இளைஞர் நலன் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
போதைப்பொருள் குறித்த உறுதிமொழியை துணை முதல்வர் முனைவர் செந்தில் அவர்கள் வழங்கிட மாணவர்கள் அனைவரும் அதனை ஏற்றனர்.
பேரணிநிகழ்வில் 400 மாணவர்கள் பங்குகொண்டனர்.நிகழ்வின் ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆனந்த்(அணிஎண் -54), மா.அய்யனுராஜ் (அணிஎண் -56) மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
