
Day2: Valedictory Function & Prize Distribution Ceremony – Intercollegiate Competition – Pongaloviyam 2025
தூத்துக்குடி – காமராஜ் தன்னாட்சிக் கல்லூரியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பொங்கலோவியம் என்ற பெயரில் கல்லூரி அளவிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் 08.01.2025 மற்றும் 09.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு நாளான 09.01.2025 அன்று பிற்பகல் 3 .00 மணி அளவில் வெற்றிவிழாக் கொண்டாட்டம் ஆரம்பமானது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக, வருகைபுரிந்த கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறைப் பேராசிரியர் முனைவர்.G.குமரேசன் ஐயா அவர்கள் மற்றும் காமராஜ் கல்லூரியின் செயலர் திரு. P S P K J சோமு ஐயா அவர்கள், கல்லூரி முதல்வர். முனைவர் J பூங்கொடி அம்மா அவர்கள், துணைமுதல்வர்கள் .முனைவர் A அசோக் ஐயா அவர்கள் மற்றும் முனைவர் Aஅருணாசலராஜன் ஐயா அவர்கள் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்கள். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த சுழற்கோப்பை வடக்கன்குளம் எஸ் ஏ வி சகாயத்தாய் கலை மற்றும் அறிவியல் கல்லூரி [முதல் இடத்தை] யும் தூத்துக்குடி ஏ பி சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி [இரண்டாம் இடத்தை] யும் பெற்று மகிழ்ந்தனர். விழாவினை கல்லூரியின் இருபால் பேராசிரியப் பெருமக்கள், அலுவலக அன்பர்கள், மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஏற்பாடுசெய்தனர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இப் போட்டியானது மாணவ மாணவியரிடையே பெரும் எதிர்பார்பையும், ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.