
Day1: Women’s Kho Kho – Intercollegiate Competition – Pongaloviyam 2024
மகளிர்களுக்கான கோ – கோ போட்டியில் 7 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் சுற்று காமராஜ் மகளிர் கல்லூரிக்கும், ஏ. பி.ஏ. கல்லூரிக்கும் இடையே நடைபெற்றது. இதில் ஏ.பி.ஏ.கல்லூரி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்த சுற்று சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கும் , கோவிந்தம்மாள் கல்லூரிக்கும் இடையே நடைபெற்றது. இதில் கோவிந்தம்மாள் கல்லூரி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்த சுற்று தூய யோவான் கல்லூரிக்கும் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரிக்கும் இடையே நடைபெற்றது. இதில் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அரையிறுதி சுற்று ஏ.பி.ஏ.கல்லூரிக்கும் கோவிந்தம்மாள் கல்லூரிக்கும் இடையே நாளை(28.02.2024) நடைபெறும். மேலும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரிக்கு தூய மரியன்னை மகளிர் கல்லூரிக்கு இடையே நடைபெறும் அரை இறுதி சுற்றும் நாளை(28.02.2024) நடைபெறும்.