
Day 2 : Competitions for College Students – Kamarajar Birthday Celebration
பெருந்தலைவர் காமராஜரின் 121-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 13.07.2023 – வியாழக்கிழமை அன்று தென்மாவட்ட அளவில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே நாட்டுப்புறக்குழு நடனப் போட்டியும், ‘முதல்வரின் முதல்வர் காமராஜா’; என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், ‘வாழ்கிறார் பெருந்தலைவர்’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடைபெற்றன. இப்போட்டிகளில் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன. மேலும் இப்போட்டிகளைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ.கஸ்தூரி பொறுப்பாளராகவும், துணைப் பேராசிரியர்கள் முனைவர் மா. முரளி, முனைவர் க. திலகவதி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகவும் இருந்து நடத்திட தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் தன்னார்வ மாணவ மாணவியர்களும் நடத்தினர்.
இன்று கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற
நாட்டுப்புறக்குழு நடனப் போட்டியில்
1. எஸ்.ஏ.வி. சகாயத்தாய் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநெல்வேலி
2. அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி.
3. ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி.
பேச்சுப் போட்டியில்
1. மு. வசந்தகுமாரி – ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி.
2. ம. அருணா – எஸ்.ஏ.வி. சகாயத்தாய் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநெல்வேலி.
3. அ. முத்து மதுமிதா – தூய மரியன்னை கல்லூரி, தூத்துக்குடி.
கவிதைப் போட்டியில்
1. ரா. அபினேஷ்வரி – கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி.
2. சி. சுவாதி – புனித சிலுவை மனையியல் கல்லூரி, தூத்துக்குடி.
3. மா. கௌரி மனோகரி – கே.ஆர்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி.
ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளன்று சிறப்பு விருந்தினர் மூலம் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்படும்.