
Day 1 : Competitions for School Students – Kamarajar Birthday Celebration
பெருந்தலைவர் காமராஜரின் 121-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 12.07.2023 – புதன்கிழமை அன்று தென்மாவட்ட அளவில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே பரதநாட்டியப் போட்டியும் ‘படிக்காத மேதையிடம் படிக்க வேண்டியவை’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் ‘காமராஜரின் சாதனைகள்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற்றன. இப்போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டிகளைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ.கஸ்தூரி பொறுப்பாளராகவும், துணைப் பேராசிரியர்கள் முனைவர் மா. முரளி, முனைவர் க. திலகவதி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகவும் இருந்து நடத்திட தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் தன்னார்வ மாணவ மாணவியர்களும் துணையாய் நின்றனர்.
இன்று பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற
பரதநாட்டியப் போட்டியில்
1. கன்னிகாஸ்ரீ – பி.எம்.சி மெட்ரிக்குலேசன் பள்ளி
2. ம.விபாஷினி நக்ஷத்ரா – ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி
3. ப.அனுப்பிரியா – திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பேச்சுப் போட்டியில்
1. ஆ.ஸ்வேதிகா – செயின்ட் மேரிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி
2. ப. மெர்லின் ரக்ஷனா – விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி
3. சு. ஜெய்ஷிவானி – எக்ஸன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ஓவியப் போட்டியில்
1. மு.நிஸ்மா ரஷிதாபானு – பி.எம்.சி மெட்ரிக்குலேசன் பள்ளி
2. அ.ஸ்ரீதேவி – சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
3. ரா.கி.தர்ஷிணி – ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி
ஆகியோரும் வெற்றிபெற்று பரிசுக்குரியோராய் தேர்வு செய்யப்பட்டனர். பரிசுக்குரிய மாணவர்களுக்கு பரிசுகள், போட்டி பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளன்று சிறப்பு விருந்தினரால் வழங்கி சிறப்பிக்கப்படும்.