
Coconut Tree Day – UBA
நமது காமராஜ் கல்லூரியின் உன்னத பாரத் அபியான் UBA (AISHE code : 41209) செயல்பாட்டு கிராமங்கள் பெரும்பாலும் தாமிரபரணி வடிகால் பாசன பகுதிகளில் அமைந்து உள்ளது. மேலும் அந்த கிராம பகுதிகளில் இருந்த கல்லூரிக்கு கல்வி பயில வரும் கணிசமான மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் நெல், தென்னை, வாழை விவசாய சாகுபடியில் ஈடு பட்டுள்ளனர். கிராம சபை கூட்டத்தில் கருத்துரு பெற்று விவசாய நிலங்களில் இயற்கை உரங்களை பயன்படுத்துதல் , இரசாயன உரங்களை கூடிய மட்டும் தவிர்த்தல், மண்புழு உரம் , தேனி வளர்ப்பு பயிற்சி அளித்தல் போன்றவை மாணவ மணவிகளால் விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் கிராம பஞ்சாயத்து மக்களுக்கு எடுத்துரைக்க பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று (02- 09- 2024) தென்னை மரம் மற்றும் தேங்காய் தினத்தை முன்னிட்டு, விவசாய தொழிலை பிரதானமாக கொண்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பயன் பெறும் வகையில் , தென்னையை தாக்கும் காண்டா மிருக வண்டு குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் முறைகள், மேலும் தென்னை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய இயற்கை வேளாண் முறைகள் குறித்து விளக்க பட்டது. புங்கை , வேம்பு, ஆமணக்கு புண்ணாக்கு பூச்சி கொல்லி கரைசல் பயன்பாடு, தேனீ வளர்ப்பின் மூலம் தென்னையில் அதிக மகசூல் கிடைக்கும் முறைகள் எடுத்துரைக்க பட்டது. இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் கிராம விவசாயிகளை சந்தித்து விவசாய முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒழுங்கு முறை விவசாய பொருட்கள் விற்பனை கூட அதிகாரிகள் வழிகாட்டுதல் பேரில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உன்னத பாரத் இயக்கம் உடன் இணைந்து பண்ணை அறிவியல் துறை உதவி பேராசிரியர் திரு.சிவ சுப்ர ஜன்மணியன் மற்றும் தாவரவியல் உதவி பேராசிரியர் முனைவர் P.பவுன் ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.