Home Events Club Activity – Tamil Dept.

Club Activity – Tamil Dept.

காமராஜ் கல்லூரி, தமிழ்த் துறை, காமராசர் கலை இலக்கியக் கழகம், இணைந்து (club activities – festival) தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களது பிறந்தநாள் குறித்த கொண்டாட்ட நிகழ்வு 20.2.25 அன்று நடைபெற்றது. உ வே சா அவர்களது வரலாறு உவேசா தமிழுக்கு ஆற்றிய தொண்டு தமிழ் தாத்தா என உவேச அழைக்கப்பட்டதற்கான காரணம் இதுகுறித்து மாணாக்கர்களிடையே குழு விவாதம் நடைபெற்றது. மாணாக்கர்கள் தனிப்பட்ட முறையில் உவேசா குறித்து தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களை பிறர் அறிய எடுத்துரைத்தனர். மாணாக்கர்கள் ஆர்வத்தோடு இந்நிகழ்வில் பங்கேற்றனர். தமிழ்த்துறை மாணாக்கர்கள் 106 பேர் இதில் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது

Date

Feb 21 2025
Expired!

Time

3:00 pm - 4:00 pm

Location

Golden Jubilee Block

Leave A Reply