
Club Activities – Dept. of Tamil
19.12.2024 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை(சுயநிதிப்பிரிவு) மற்றும் காமராசர் கலை இலக்கியக் கழகம் இணைந்து Club Activities என்ற நிகழ்ச்சி பிரிவில் திறன்வளர்போட்டிகளை நடத்தினர். இளங்கலைத் தமிழ்த்துறை மாணாக்கர்கள் ஒருங்கிணைந்து இந்நிகழ்வை நடத்தினர். .இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள், இளங்கலை ஆங்கிலம், இளங்கலை நுண்ணுயிரியல், இளங்கலை வேதியியல் மாணவர்கள் கலந்து கொண்டு தம் திறமையை வெளிக்காட்டினர் மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வரவேற்புரையை ம.சீதாராமன் இளங்கலைத் தமிழ் மாணவரும், நன்றியுரை ப.லட்சுமணன் இளங்கலைத் தமிழ் மாணவரும், தொகுப்புரை ஜா.ரியானி இளங்கலைத் தமிழ் மாணவியும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.