
Bridge Course – Dept. of Tamil
காமராஜ் கல்லூரி தமிழ்த் துறை (சுயநிதிப் பிரிவு) சார்பாக அனைத்து துறை மாணாக்கர்களுக்கும் தமிழ் மொழிக்கான bridge course நடைபெற்றது. இந்த வகுப்பில் மாணாக்கர்களுக்குத் தமிழ் எழுத்துகள் அறிமுகம், பிழையின்றி எழுத்துகளை எழுதுவது, வல்லினம் மிகும், வல்லினம் மிகா இடங்கள், ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பத்தியை வாசித்தல் .மேலும் அடிப்படைத் தமிழ்மொழி பற்றிய அறிமுக வகுப்பு நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர் க.திலகவதி,தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் இணைந்து இந்த வகுப்புகளை நடத்தினர். துணை முதல்வர் அ.அருணாசல ராஜன் ஐயா அவர்களின் பரிந்துரைப்படி வகுப்புகள் நடைபெற்றன. மாணவர்களின் வருகைப் பதிவேடு, அவர்களுக்கான பயிற்சி வினாக்கள் அதற்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன.