
Awareness Program on International Day against Drug Abuse and illicit Trafficking – NSS Units: 54 & 56
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி போதைப்பொருள் , பகடிவதை மற்றும் நாட்டுநலப்பணித்திட்டங்கள் சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு 26-06-2024 அன்று கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் படி சிறப்பாக நடைபெற்றது.துணைமுதல்வர் முனைவர் அசோக் அவர்கள் சிறப்புவிருந்தினர்களை வரவேற்று பேசினார்கள்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றி விழிப்புணர்வு நிகழ்வில் நடந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து,தலைமையுரை ஆற்றினார்கள்.போதைப் பொருள் பழக்கம் என்பது தனிப்பட்ட ஒருவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தையே அழிக்கிறது போன்ற கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் (கலால்) கல்யாணக்குமார் முன்னிலை வகுத்தார்கள்.
பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற வரலாற்றுத்துறை மூன்றாமாண்டு மாணவி அஜிதா போதை நம் வாழ்வை அழிக்கும் பாதை என்பது குறித்து பேசினார்.நிகழ்வை இரண்டாமாண்டு கணிதத்துறை மாணவன் அருள்குமார் தொகுத்து வழங்கினார்.நிகழ்வின் நிறைவாக போதைப்பொருள் ஒழிப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.மா.அய்யனுராஜ் நன்றி கூறினார்கள். விழா ஏற்பாடுகளை பகடிவதை ஒருங்கிணைப்பாளர் திரு.ஆனந்த் அவர்கள் சிறப்புடன் செய்திருந்தார்கள்.நிகழ்வில் 170 மாணவர்கள் பங்குகொண்டு கருத்துகளை கேட்டறிந்தார்கள்.