Home Events - Kamaraj College Awareness Program: Harmony Through Yoga – NSS Units 54 & 56

Awareness Program: Harmony Through Yoga – NSS Units 54 & 56

தூத்துக்குடி,காமராஜ் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் அணி எண் 54&56 சார்பில் 10வது சர்வதேச யோகா தினவிழா கல்லூரி முதல்வர் முனைவர்.ஜெ.பூங்கொடி அவர்களின் ஆலோசனைப்படி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A.அசோக் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்கள். மேலும் அவர் தனது உரையில் பண்டையகால மக்கள் உணவு முறையை பின்பற்ற வேண்டும் எனவும் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு யோகா மிகவும் முக்கிய பங்களிக்கிறது எனவும் கூறினார்கள். இவ்விழாவின் தொடக்கமாக கல்லூரியின் உதவிப்பேராசிரியர் மா.அய்யனுராஜ்,(நாட்டுநலப்பணித்திட்டம் அணிஎண்-56) அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்கள். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பூர்ணாலயா யோகாப் பயிற்சியாளர் திருமதி.ஜெயப்பிரியா அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆரோக்கியமாக வாழ தினமும் யோகா பயிற்சியினை செய்ய வேண்டும் எனவும் எவ்வாறு எளிய முறையில் ஆசனம் செய்ய வேண்டும் என்றும் செய்முறையாக செயல் முறை பயிற்சியளித்தார்கள். இவ்விழாவின் முடிவாக நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் பா.ஆனந்த் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். இவ்விழாவினை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் யோகா ஒருங்கிணைப்பாளர் முனைவர் M.L.ராஜேஷ்வரி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.இவ்விழாவினை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply