
74th Republic Day Celebrations
மக்களால் மக்களுக்காக ஆட்சி நடத்தும் நாடே குடியரசு நாடாகும் .இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட தினமே குடியரசு தினமாகும்.அத்தகைய சிறப்பு மிக்க குடியரசு தினத்தைப் போற்றும் விதமாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 74 வது குடியரசு தின விழா இனிதே கொண்டாடப்பட்டது. விழாவில் காமராஜ் கல்லூரியின் செயலாளர் மரியாதைக்குரிய திரு . P.S.P.K.J. சோமு அவர்கள் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர். இவ்விழாவில் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் M. தட்சிணாமூர்த்தி அவர்கள் பணி நிறைவடைவதை முன்னிட்டு ,அவரை கௌரவிக்கும் விதமாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்களில் கலந்துகொண்டு சிறப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.விழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.நிறைவாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.