முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு – தமிழ்த்துறை
25.2.23 காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பாக முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணாக்கர்கள் மகிழ்வோடு கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. முன்னாள் மாணாக்கர்கள் துணைமுதல்வர் முனைவர் அ.அருணாசலராஜன் அவர்களை கௌரவித்தனர். முதலாம் ஆண்டு மாணவி க.அஸ்வதி ராதா வரவேற்புரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் அ. அருணாசலராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாணாக்கர்கள் தமிழ்துறைக்குப் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி முன்னாள் மாணாக்கர்களை வரவேற்று பேசினார். தமிழ்த்துறை இந்நாள் மாணாக்கர்களோடு முன்னாள் மாணாக்கர்கள் கலந்துரையாடினர். தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னாள் மாணவி அ.பிரியா, முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம், முதல்வர் முனைவர் ஜ. பூங்கொடி, துணை முதல்வர் முனைவர் அ.அருணாசலராஜன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். நாட்டுப்பண்ணோடு நிகழ்வு நிறைவடைந்தது.
