Back
Home Events நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி – தமிழ்த்துறை

நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி – தமிழ்த்துறை

03.04.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும், காமராசர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து “நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி” என்ற நிகழ்வை நடத்தியது . இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. இரண்டாம்ஆண்டு மாணவி கு. அஸ்வதி ராதா வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவி முனைவர் க.திலகவதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் திரு. S. சுப்பிரமணியன் அவர்கள் வேலை வாய்ப்புப் பற்றியும், நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் குறித்தும், ஆளுமைப் பண்புகளைப் பற்றியும் மாணவர்களோடு கலந்துரையாடினார். சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நம் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அ.அருணாசல ராஜன் அவர்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ர. விக்னேஷ், சோ. சோலை ராஜா கு. அஸ்வதி ராதா ஆகியோர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவன் ர. விக்னேஷ் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை முழுவதுமாக முதலாம் ஆண்டு மாணவன் சோ.சோலைராஜா தொகுத்து வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவடைந்தது.

Date
Apr 03 2024
Expired!
Time
9:00 am
Location
Seminar Hall - Golden Jubilee Block
Other Locations

Leave A Reply