Home Events சிறப்பு விருந்தினர் விரிவுரை: பொருநை நதியும் பண்டைய தமிழ் சமூகம் – தமிழ்த்துறை

சிறப்பு விருந்தினர் விரிவுரை: பொருநை நதியும் பண்டைய தமிழ் சமூகம் – தமிழ்த்துறை

13.09.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த் துறையும் (சுயநிதிப்பிரிவு), காமராசர் இலக்கியக் கழகமும் இணைந்து சிறப்பு விருந்தினர் விரிவுரை நிகழ்வை நடத்தினர். இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் செ.சஞ்சய் மற்றும் ர.விக்னேஷ் தொகுப்புரை ஆற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. மா.முத்து அருணா இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி வரவேற்புரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் அ. அருணாசல ராஜன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். “பொருநை நதியும் பண்டைய தமிழ் சமூகம்” என்னும் தலைப்பில் வரலாற்றுத் துறைப் பட்டதாரி ஆசிரியர் முனைவர் ஆ.மாணிக்கம் அவர்கள் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சி, கல்வெட்டிலுள்ள வட்ட எழுத்துக்கள் பற்றி விளக்கமாகக் கூறி மாணவர்களோடு கலந்துரையாடினார். மாணவர்களும் நிகழ்வின் இறுதியில் தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டும் தெளிவுபடுத்திக் கொண்டனர். முதலாம் ஆண்டு மாணவன் சோ.சோலைராஜா நன்றியுரை கூறினார். தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்கள், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர். நாட்டுப்பண்ணோடு விழா இனிதே நிறைவடைந்தது.

Date

Sep 13 2023
Expired!

Time

10:30 am

Location

Kamarajar Kalvi Arangam (Main Auditorium)

Leave A Reply