கிராம சபை கூட்டம் – UBA
ஆகஸ்ட் 15 அன்று தூத்துக்குடி மாவட்டம் சேர்வை காரன் மடம் கிராம சபை கூட்டம் தங்கம்மாள் புரம் அங்கன்வாடி மைய வளாகத்தில் நடை பெற்றது.இதில் காமராஜ் கல்லூரி UBA மாணவ பிரதிநிதிகளாக பத்து பேர் கலந்து கொண்டனர்.கிராம சபை கூட்டத்தில் நிறை வேற்ற பட வேண்டியசமுக பணிகள் குறித்த விபர குறிப்பு அறிக்கையை UBA மாணவ பிரதிநிதி L. பால முருகன் , இரண்டாம் ஆண்டு தாவரவியல் அவர்கள் கிராம சபை தலைவர் திருமதி.G. ஜெபக்கனி அவர்களிடம் வழங்கினார். இக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், பொது மக்கள்,காமராஜ் கல்லூரி உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஜெ. நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கிராம சபை முன் எடுக்கும் சமூக பணிகளில் திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைகழகம் UBA மற்றும் காமராஜ் கல்லூரி UBA கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் செயலாற்றிட தீர்மானம் நிறைவேற்ற பட்டது.மேலும் சிறந்த பத்து UBA நிறுவனங்களில் ஒன்றாக விருது பெற்ற காமராஜ் கல்லூரி உன்னத பாரத் இயக்கம் அலகிற்கு பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவிக்க பட்டது.இந்த கல்வி ஆண்டில் ” Rural camp ” நடத்திடவும் , கிராம பொருளாதார முன்னேற்றம், சீர் மிகு செயல் திட்டங்கள்செயலாக்கம் குறித்து கிராம சபை உறுப்பினர்கள் விவாதித்தனர். பொது மக்கள் குறை கேட்டு மனு வாங்கும் நிகழ்வும் நடைபெற்றது.கிராம நிர்வாக மேலாண்மை, அலுவல் பணிகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.காமராஜ் கல்லூரி நிர்வாகம்,கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி மற்றும் UBA வழிகாட்டுதல் குழு ஆலோசனை பேரில் கிராம சபை சமூக மேம்பாட்டு பணிகளை உன்னத பாரத் அபியான் செய்து வருகிறது. இதே போல் குலையன் கரிசல் ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு அதன் தலைவர் திருமதி V.முக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர்கள் திருமதி மாரியம்மாள் மற்றும் கோமதி அவர்கள் செய்து இருந்தனர்.
