Home Events “எழுமின் விழிமின்” – விழிப்புணர்வு நிகழ்ச்சி

“எழுமின் விழிமின்” – விழிப்புணர்வு நிகழ்ச்சி


8.11.2022 அன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி தமிழ் துறையும் இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து “எழுமின் விழிமின்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினராக முதுகலை ஆசிரியர் திரு . பே.சங்கரலிங்கம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில்இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி கனகலெட்சுமி வரவேற்புரை  அளித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் திருமதி ம. மாதரசி விருந்தினரை வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார். தமிழ் துறை தலைவர் க.திலகவதி அவர்கள் சிறப்பு விருந்தினரை கௌரவித்து பொன் முடிப்பும் புத்தகமும் வழங்கினார். பே.சங்கரலிங்கம் ஐயா மிகச் சிறப்பாக தமிழுடன் உறவாடி குறிக்கோள் வகுத்தலும் அதை மிகுதிப்படுத்தலும் தளர்வில்லாமல் செயல்படுத்தலும் எங்ஙனம் என மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டினார். தமிழ் துறை பேராசிரியர் திருமதி ப.மேகலா அவர்கள் விழாவிற்கு நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.

Date

Nov 08 2022
Expired!

Time

10:00 am - 12:00 pm

Leave A Reply