Back
Home Events முப்பெரும் விழா – காமராஜ் கல்லூரி

முப்பெரும் விழா – காமராஜ் கல்லூரி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று 05.04.2024 காலை 10 மணியளவில் நிறுவனர் தினவிழா, விளையாட்டு நாள்விழா மற்றும் கல்லூரி ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் முனைவர் ஊ. அசோக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிறுவனர் விழாவை முன்னிட்டு கல்லூரியில் துறைகளுக்கு இடையேயான ஆடவர்களுக்கான கிரிக்கெட் மகளிர்க்கான கோ-கோ மற்றும் இருபாலருக்குமான சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் துணை மேலாளர் (ஓய்வு) மு. கிருஷ்ணகுமார் பரிசுகள் வழங்கினார்கள். கல்லூரியின் விளையாட்டு நாள் விழா போட்டியில் மாணவர்களுக்கு 14 போட்டிகளும் மாணவியர்களுக்கு 10 போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவரான கோவை பாரதியார் பல்கலைக்கழக உடற்பயிற்சித்துறை பேராசிரியர் முனைவர் பு.குமரேசன் பரிசுகளை வழங்கினார். அவர் கல்லூரியின் முன்னாள் மாணவ சங்கத்திற்கான நன்கொடையினை கல்லூரியின் முன்னாள் மாணவர் தற்போதைய கல்லூரியின் கண்காணிப்பாளரான பு.சரவணனிடம் வழங்கினார். ஏப்ரல் 2022 மற்றும் ஏப்ரல் 2023 ஆம் ஆண்டுகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் ஏப்ரல் 2022 பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் 12 நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 2022-2023 ஆண்டுக்கான பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரிக்கான விருது பெற்ற விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெ. நாகராஜன் மற்றும் பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட அணியாக தேர்வு பெற்ற அணியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கருப்பசாமிக்கும் சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பெற்றன. இப்பரிசுகளை சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் முனைவர் ஊ. அசோக் அவர்கள் வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. பூங்கொடி ஆண்டு அறிக்கையினையும் கல்லூரி கணிப்பொறித் தலைவர் முனைவர் ஜோசப்ராஜ் விளையாட்டு விழா அறிக்கையினையும் வாசித்தனர். கல்லூரி செயலாளர் திரு.P.ளு.P.மு.து. சோமு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அசோக் அவர்களின் வரவேற்புரையும் வேதியியல் துறை தலைவர் முனைவர் சுகிர்தாதேவியின் நன்றியுரையும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் சிறப்பான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், துணை முதல்வர், கண்காணிப்பாளர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் சிறப்பாக பங்கு பெற்றனர்.

Date
Apr 05 2024
Expired!
Time
10:00 am
Location
Swami Vivekananda Block

Leave A Reply