Back
Home Events முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – தமிழ்த்துறை

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – தமிழ்த்துறை

01.09.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பாக முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவி முத்துக்குட்டி மகிழ்வோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. இரண்டாம் ஆண்டு மாணவன் கொ.மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி முன்னாள் மாணவியை வரவேற்றுப் பேசினார். தமிழ்த்துறை இந்நாள் மாணாக்கர்களோடு, முத்துக்குட்டி அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரியில் தாங்கள் படித்த போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தங்களது தற்போதைய வாழ்வையும் எடுத்துரைத்தார். தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னாள் மாணவி முத்துக்குட்டி முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம், முதல்வர் முனைவர் ஜ. பூங்கொடி, துணை முதல்வர் முனைவர் அ.அருணாசல ராஜன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்தார். நாட்டுப்பண்ணோடு நிகழ்வு நிறைவடைந்தது.

Date
Sep 01 2023
Expired!
Time
11:30 am
Location
Bharathiyar Block

Leave A Reply