
மண்புழு உரம் தயாரிப்பு கூடம் – UBA
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குலையன்கரிசல் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில், மத்திய 15 வது நிதிக் குழு மானியம் திட்டத்தின் பேரில் மண்புழு உரம் தயாரிப்பு கூடம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. நமது காமராஜ் கல்லூரி உன்னத பாரத் இயக்கம் சார்பில், மண்புழு உர மேலாண்மை குறித்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிறப்பு களபயிற்சிகள் மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாய பெரு மக்களுக்கு நடத்திட பஞ்சாயத்து நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தூய்மை கிராமம் திட்டத்தில் திட கழிவு மேலாண்மை குறித்து கிராம மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.