
பொருநை 7 -வது புத்தகத்திருவிழா: நெல்லை – NSS Units: 54 & 56
நெல்லை பொருநை 7 -வது புத்தகத்திருவிழாவில் நம் காமராஜ் கல்லூரி மாணவர் வாசகர் வட்டம் சார்பாக 30 மாணவர்கள் கலந்துகொண்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை 30 மாணவர்களும் பரிசாகப் பெற்றனர். மேலும் ஐந்தாயிரம் மதிப்புடைய புத்தகங்களும் இக்கண்காட்சி சார்பாக நமது கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாணவர்களை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான உதவிப்பேராசிரியர்கள் பா.ஆனந்த் (அணிஎண்-54) மா.அய்யனு ராஜ் (அணிஎண்-56), சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறை வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.வசந்தி ஆகியோர் அழைத்துச் சென்றிருந்தனர்.