
பேச்சுப்போட்டி & ஓவியப்போட்டி – NSS Units 54 & 56
தூத்துக்குடி மாவட்டம் வனத்துறை சார்பாக நம் காமராஜ் கல்லூரியில் 08-10-2023 -ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு “வனங்களைக் காப்போம்” என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டி காமராஜ் கல்வி அரங்கிலும், ஓவியப்போட்டி முதலாமாண்டு வேதியியல், முதுநிலை முதலாமாண்டு கணித வகுப்பிலும் நடைபெற்றது. இதில் வனச்சரக அலுவலர்கள் கனிமொழி, பிருந்தா ஆகியோர் தலைமையேற்று மாணவர்களுக்கு போட்டிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். நம் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். அசோக் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் 50 க்கும் மேற்பட்ட வனக்காவலர்களும், பள்ளி, கல்லூரி அளவில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்களும் போட்டியில் பங்கேற்றனர். இதில் நம் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அணி எண் 54 & 56 சார்பாக மாணவர்கள் போட்டியில் பங்கேற்றும், போட்டியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளையும் செய்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் திரு.பா.ஆனந்த் (ஆங்கிலத்துறை), திரு.மா.அய்யனுராஜ் (தமிழ்த்துறை) ஆகியோர் மாணவர்களை வழிநடத்தினார்கள்.