
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு – தமிழ்த்துறை
21.03.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு) சார்பாக பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது. இளங்கலைத்தமிழ் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவ, மாணவியர்கள் 110 பேர் அவர்களது பெற்றோர்களோடு கலந்து கொண்டனர் .பருவத்தேர்வு முடிவுகள் குறித்தும்,தேர்ச்சி விகிதம், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. திலகவதி, தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், முனைவர் சு.ராஜலெட்சுமி, முனைவர் ஜெ.ராஜசெல்வி, முனைவர் ந.சரண்யா, திருமதி அ.எமிமா ஆகியோர் பெற்றோர்களோடு கலந்துரையாடினர்.