
பெண்களின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் – UBA
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் ( AISHE : Code 41209 ) சார்பில் , சேர்வைகாரன்மடம் கிராம பஞ்சாயத்து -சக்கம்மாள் புரம் , தங்கம்மாள் புரம் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பிற்கான அவசர சேவைகள் மற்றும் தொலை தொடர்பு எண்கள் & குழந்தை திருமண தடை சட்டம் விழிப்புணர்வு பிரச்சாரம் ( 22- 09- 2024) நடை பெற்றது. சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக மாணவர்கள் வீதி தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிராம பஞ்சாயத்து தலைவர் திருமதி.G. ஜெபக்கனி அவர்கள் ஆலோசனை பேரில், டயல் 181, மகளிர் உடனடி பாதுகாப்பு எண் : 0461- 2300 181 குறித்து பேருந்து நிறுத்தம், பொது மக்கள் கூடும் இடங்கள், சமுதாய கூடம், மக்கள் மன்ற வளாகம் சுவரொட்டிகள் வழங்கப்பட்டன.