Home Events - Kamaraj College புத்தாக்கப் பயிற்சி – NSS Units: 54, 55 & 56

புத்தாக்கப் பயிற்சி – NSS Units: 54, 55 & 56

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, நாட்டுநலப்பணித்திட்டம் 54,55 & 56 அணிகள் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முதலாமாண்டு பொருளாதாரத்துறையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினரையும், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களையும் திட்டஅலுவலர மா.அய்யனுராஜ் (அணி எண் -56) வரவேற்றுப்பேசினார். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நிர்வாக வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் R. கருப்பசாமி அவர்கள் கலந்துகொண்டு நாட்டுநலப்பணித்திட்ட குறிக்கோள் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டத்தின் செயல்பாடுகள்,வெளிமாநிலப் பயணம் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். நிறைவாக திட்ட அலுவலர் முனைவர் O. நேத்தாஜி (திட்ட அலுவலர் – 55) அவர்கள் நன்றியுரை கூற பயிற்சி சிறப்புடன் நிறைவுற்றது.

Leave A Reply