Home Events - Kamaraj College பாலர் சபா – குழந்தைகள் நேய கிராம ஊராட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி – UBA

பாலர் சபா – குழந்தைகள் நேய கிராம ஊராட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி – UBA

காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் ( AISHE code : 41209 ) , தூத்துக்குடி சார்பில் குலையன்கரிசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் நேய கிராம ஊராட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி – பாலர் சபா (24 – 11- 2024) அன்று பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. R. ராதா அவர்கள் தலைமையில் நடை பெற்றது. குழந்தைகள் தங்களின் அபிப்பிராயங்களையும், தேவைகளையும், எடுத்துக்கூறி விவாதித்தனர். மேலும், பள்ளி வளாக பாதுகாப்பு சுற்று சுவர் கட்டுமானம், கழிப்பிட தடுப்பு சுவர் உள்கட்டமைப்பு தேவை குறித்த தேவைகள் பதிவு செய்யப்பட்டது. உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, பாலர் சபா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக ஸ்மார்ட் வகுப்பு அறையில் அறிவியல் அடிப்படை பாடம் நடத்த பட்டது.

Leave A Reply