
பழங்குடியின மக்களின் கிராம பொருளாதார முன்னேற்றம் மற்றும் இளையோர் திருவிழா, 2024 அசாம் – UBA
வடகிழக்கு இந்தியாவின் மிகப் பழமையான கர்பீ இன பழங்குடியின மக்களின் பாரம்பரிய இளையோர் திருவிழா பொன் விழா ஆண்டு அசாம் மாநிலத்தில் கர்பி அங்கிலாங் – ல் ஜனவரி 17 முதல் 19 வரை நடைபெற்றது. மாண்புமிகு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் துவக்கி வைத்த இந்த இளையோர் திருவிழாவில் அசாம் மாநிலத்தில் முதல் அமைச்சர் , மற்றும் பலர் கலந்து கொண்டனர் மேலும் கௌரவ அழைப்பாளராக காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ.நாகராஜன் கலந்து கொண்டார்.கிராம பொருளாதாரம், பழங்குடி மக்களின் முன்னேற்றம், பண்ட மாற்று முறை சந்தை -யினை முன்னிலை படுத்தி கிராம சந்தை பண்டமாற்று முறையில் நடை பெற்றது. நமது காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் (AISHE code – 41209)சார்பில் நமது கல்லூரியில் உற்பத்தி செய்யப்பட்ட தேன் மற்றும் மதிப்பு கூட்ட பட்ட தேன் பொருட்கள் சந்தை படுத்த பட்டது. மேலும் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகள் குறித்தும், இயற்கை வேளாண் முறைகள் குறித்தும் ஆயவுக்கட்டுரைகள் தயாரிக்கப்பட்டது.