
பயிற்சிப் பட்டறை: வீதி நாடகமும், விழிப்புணர்வும் – Tamil Dept.
காமராஜ் கல்லூரி தமிழ்த் துறை, காமராசர் கலை இலக்கியக் கழகம் இணைந்து 27.01.2025. அன்று பயிற்சிப் பட்டறையை நடத்தினர். கலைவளர்மணி ப.சக்திவேல்* வீதிநாடகக் கலைஞர் நாட்டுப்புறக் கலைஞர் மற்றும் பயிற்சியாளர் புகைப்படக் கலைஞர் பொம்மலாட்ட கலைஞர் அன்னார் அவர்கள் வீதி நாடகமும், விழிப்புணர்வும் எனும் தலைப்பில் பயிற்சியாளராக சிறப்பித்தார். மாணாக்கர்களுக்கு நாட்டுப்புறக்கலைகள், வீதி நாடகம், அதன் முக்கியத்துவம், நாடகம் நடைபெறும் விதம், வீதி நாடக மேடை, குறித்து பயிற்சி அளித்தார். மாணாக்கர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். முதுகலைத் தமிழ் மாணாக்கர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினர். 125 மணாக்கர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.