
பயிற்சிப் பட்டறை – தமிழ்த்துறை
18.08.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறையும் ( சுயநிதிப்பிரிவு), காமராசர் இலக்கியக் கழகமும் இணைந்து பயிற்சிப் பட்டறை நிகழ்வை நடத்தினர். சோ.சோலைராஜா , இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் தொகுப்புரை ஆற்றினார்.தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. ர. விக்னேஷ் இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் வரவேற்புரை ஆற்றினார்.துணை முதல்வர் முனைவர் அ. அருணாசல ராஜன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் அ. அருணாசல ராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினர் முனைவர் இரா.அந்தோணி ராஜ் அவர்களைக் கௌரவித்தார். படைப்பாளியின் படைப்பிற்கான சூழல் என்னும் தலைப்பில் தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரான முனைவர் இரா. அந்தோணி ராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு கவிதை ,சிறுகதை, புதினம் எழுதும் முறை பற்றி விளக்கமாகக் கூறி மாணவர்களோடு கலந்துரையாடினார். மாணவர்களும் நிகழ்வின் இறுதியில் கவிதைகளைப் படைத்தும், தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டும் தெளிவுபடுத்திக் கொண்டனர். பயிற்சிப் பட்டறையில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்றாம் ஆண்டு மாணவன் ம. பாரதி கண்ணன் , இரண்டாம் ஆண்டு மாணவி கு. அஸ்வதி ராதா,முதலாம் ஆண்டு மாணவன் சோ.சோலைராஜா ஆகியோருக்கு அவரது படைப்பில் ஒன்றான ஒரு பறவையின் சிறகடிப்புக் காலம் என்னும் கவிதை நூலை பரிசாக வழங்கினார். இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி பே. தங்கரத்னம் நன்றியுரை கூறினார்.தமிழ்த்துறைத் தலைவர் , பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.நாட்டுப்பண்ணோடு விழா இனிதே நிறைவடைந்தது.