Home Events - Kamaraj College பயிற்சிப் பட்டறை – தமிழ்த்துறை

பயிற்சிப் பட்டறை – தமிழ்த்துறை

நம் காமராஜ் கல்லூரியின் (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும் காமராசர் கலை இலக்கியக்கழகமும் இணைந்து ஒருநாள் பயிற்சிப் பட்டறை நிகழ்த்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்நிகழ்வில் முதலாமாண்டு மாணவன் சோலைராஜா வரவேற்புரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த தமிழ்துறைப் பேராசிரியர் முனைவர் மு. செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினரான தூத்துக்குடியைச் சார்ந்த தமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் திரு.ப.ஸ்ரீதர கணேசன் அவர்களைக் கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள், மாணவர்களிடையே படைப்புத்திறனை வளர்ப்பதற்கான உத்திகளைத் தமது உரை மூலம் வழங்கினார். மாணவர்கள் எழுத்தாளர் அவர்களிடம் படைப்பாற்றல் குறித்து வினாக்களை எழுப்பினர். அதற்கு ஐயா அவர்கள் மாணவர்களின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவன் சஞ்சய் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை முழுவதுமாக முதலாம் ஆண்டு மாணவி ரியானி தொகுத்து வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதாக முடிவடைந்தது.

Leave A Reply