
பன்னாட்டுக் கருத்தரங்கம் – தமிழ்த் துறை
காமராஜ் கல்லூரி தமிழ்த் துறையும் (சுயநிதிப்பிரிவு) பிரணவ் தமிழியல் ஆய்விதழும் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கத்தை 18.04.23 அன்று நடத்தினர்.ISSN புத்தகமாக வெளியிடுவதற்கு 50 கட்டுரைகள் வந்துள்ளன. இலங்கையில் இருந்து மூன்று கட்டுரைகள் வந்துள்ளன. மேலும் பிற மாவட்டங்களில் இருந்தும் கட்டுரைகள் வந்துள்ளன. முதல்வர் ,துணை முதல்வர், மற்றும் சிறப்பு விருந்தினர்களை மாணவிகள் பூரணக்கும்ப மரியாதையோடு சிலம்பம் அடித்து வரவேற்றனர். ம.முத்துக்குட்டி இளங்கலைத்தமிழ் மூன்றாமாண்டு மாணவி தொகுப்புரையாற்றினார். முத்து அருணா இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவி வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் முனைவர் ஜ.பூங்கொடி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார் துணை முதல்வர் அ.அருணாசல ராஜன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் பிரணவ் ஆய்விதழின் நிறுவனர் முனைவர் சீதாலட்சுமி சுப்பிரமணியன் அவர்கள் நோக்க உரையாற்றினார் முதல் அமர்வுக்கு ,முனைவர் க.சுப்புலட்சுமி தமிழ்த்துறைத்தலைவர்
ஏ .பி. சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி அவர்கள் அமர்வுத் தலைவராக இருந்தார். G.meet மூலம் வெளியூர், வெளிநாடுகளில் உள்ள கட்டுரையாளர்கள் பங்கேற்று தங்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இரண்டாம் அமர்வுக்கு,செ. கஸ்தூரி தமிழ்த்துறைத்தலைவர் காமராஜ் கல்லூரி(Aided) தூத்துக்குடி. அவர்கள் அமர்வுத்தலைவராக இருந்தார். கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இரண்டு அமர்வும் நிறைவுற்றது. வெ.கனகலட்சுமி இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவி நன்றியுரைக் கூறினார் பன்னாட்டுக்கருத்தரங்கம் youtube மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது .காட்சித் தொடர்புத்துறைத் தலைவர் ஜாஸ்மின் அவர்களும், அத்துறைப் பேராசிரியர்களான கு.சீனிவாச மணிகண்டன் அவர்கள்,ம.சுரேஷ் அவர்களும் இந்நிகழ்வுக்கான ஒளி, ஒலிப்பதிவுகளைச் சிறப்பாக செய்து கொடுத்தனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சு.இராஜலெட்சுமி, முனைவர் ஜெ. ராஜ செல்வி ,முனைவர் க.சுப்புலட்சுமி, முனைவர் ந. சரண்யா ஆகியோர் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். நாட்டுப்பண்ணோடு நிகழ்வு நிறைவடைந்தது